கோப்புப் படம்
கோப்புப் படம்

தில்லி மாணவி மீது 'ஆசிட்' வீச்சு: 3 பேர் கைது!

மேற்கு தில்லியில் 17 வயது சிறுமி மீது இன்று காலை ஆசிட் வீசி தாக்குதல் நடத்திய வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Published on

புதுதில்லி: மேற்கு தில்லியில் 17 வயது சிறுமி மீது ஆசிட் வீசி தாக்குதல் நடத்திய வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாக்குதலுக்கான நோக்கம் என்ன என்பதை அறிய அவர்களிடம் தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

மேற்கு தில்லியில் உள்ள தனது வீட்டில் இருந்து பள்ளிக்கு சென்ற சில நிமிடங்களில் முகமூடி அணிந்த இருவர் இருசக்கர வாகனத்தில் வந்து ஆசிட் வீசியுள்ளனர். இதில் பலத்த தீ காயங்களுடன் சிறுமி சஃப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக தனது தங்கையுடன் இருந்த இளம்பெண், தாக்குதலுக்கு காரணமான இருவரை குறிப்பிட்டுள்ளார். அவர்களில் ஒருவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார் என்று காவல்துறை துணை ஆணையர் எம் ஹர்ஷா வர்தன் தெரிவித்தார்.

முகத்தில் ஏழு முதல் எட்டு சதவிகிதம் தீக்காயங்களுடன் சிறுமியின் கண்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தீக்காயமடைந்த சிறுமி ஐசியு-வில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சிறுமியின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது என்று மருத்துவமனையின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

ஆசிட் வீச்சுக்கு லெப்டினன்ட் கவர்னர் வி.கே. சக்சேனா உள்ளிட்ட பெண்கள் அடங்கிய குழுக்களும் தடை விதிக்கப்பட்டிருந்தும் சந்தையில் ஆசிட் கிடைப்பது குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கிடையில் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எப்படி இத்தனை தைரியம் வந்தது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com