
தில்லியில் நடைபெற்ற ஆசிட் வீச்சுக்கு மகளிர் ஆணையத்தின் தலைவர் ஸ்வாதி மாலிவால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாலிவால் கூறுகையில்,
ஆசிட் விற்பனை நகரில் அமோகமாக நடைபெறுகிறது என்றும், அதற்கு எதிரான தடையை கடுமையாக அமல்படுத்த நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் அவர் கூறினார்.
இந்த சம்பவம் தொடர்பாக நகர காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். தாக்குதல் நடத்தியவர்களைக் கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.
மகளிர் ஆணையம் பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. பல பரிந்துரைகளை வழங்கியுள்ளது. ஆனால் அமில விற்பனை தொடர்கிறது.
காய்கறிகள் விற்கப்படுவது போல், யார் வேண்டுமானாலும் ஆசிட் வாங்கி பெண்கள் மீது வீசலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
அரசு ஏன் தூங்குகின்றன? ஒரு பெண் ஆசிட் வீசி தாக்கப்பட்டால், அவளுக்கு தீராத வடுவாக இருப்பதோடு, அவளது வாழ்க்கையும் அழிக்கப்படுகிறது.
நாங்கள் பல அறிவிப்புகள், பல சம்மன்கள் அனுப்பியுள்ளோம், ஆனால் இன்னும் அமில விற்பனை தொடர்ந்துகொண்டுதான் உள்ளது.
ஆசிட் விற்பனைக்கு எதிராக நாங்கள் தொடர்ந்து போராடுவோம், மேலும் சூழ்நிலை கோரினால் நீதிமன்றத்தை அணுகுவோம் என்று அவர் மேலும் கூறினார்.
மேற்கு தில்லியில் உத்தம் நகரில் 17 வயது சிறுமி மீது இரண்டு நபர்கள் ஆசிட் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. முகம், கண்களில் தீக்காயங்களுடன் சிறுமி சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.