விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

குன்னூரில் 30 செ.மீ மழை பதிவு: பல இடங்களில் மண் சரிவு!

குன்னூரில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. 

News image
Updated On :14 டிசம்பர் 2022, 8:05 am

DIN

குன்னூரில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மாண்டஸ் புயலின் காரணமாக கடந்த வாரம் நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளில் கடுமையான பனி மூட்டத்துடன் தொடர் சாரல் மழை பெய்து வந்தது. 

குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. நேற்று விடிய விடியக் கொட்டித் தீர்த்த கனமழையால் பல பகுதிகளில் மண் சரிவும் ஏற்பட்டுள்ளது. 

குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் மட்டும் 11 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி அப்பகுதியில் தற்காலிகமாக போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மலை ரயில் சேவையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. குன்னூரில் இதுவரை 30 செ.மீ  மழைப் பதிவாகியுள்ளது. 

கனமழை எதிரொலியாக மாணவர்களின் பாதுகாப்புக் கருதி குன்னூர் மற்றும் கோத்தகிரி தாலுக்காவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.