கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பயிர் காப்பீடு: 'விவசாயிகளுக்கு ரூ.1,000 கிடைப்பதை உறுதி செய்வோம்'

பயிர்க் காப்பீட்டிற்குத் தகுதியான விவசாயிகளுக்கு இனி குறைந்தபட்சமாக ரூ.1,000 உறுதியாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மகாராஷ்டிர விவசாயத் துறை அமைச்சர் அப்துல் சத்தார் இன்று (டிச.15) தெரிவித்தார்.

News image

கோப்புப் படம்.

Updated On :15 டிசம்பர் 2022, 3:02 pm

மும்பை: பயிர்க் காப்பீட்டிற்குத் தகுதியான விவசாயிகளுக்கு இனி குறைந்தபட்சமாக ரூ.1,000 உறுதியாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மகாராஷ்டிர விவசாயத் துறை அமைச்சர் அப்துல் சத்தார் இன்று (டிச.15) தெரிவித்தார்.

இது குறித்து மேலும் அவர் கூறியதாவது:

பயிர் காப்பீடு கோரி 50 லட்சம் விண்ணப்பங்கள் இதுவரை பெறப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. தகுதியுள்ள ஒவ்வொரு விவசாயிக்கும் குறைந்தபட்சம் ரூ. 1,000 பெறுவதை நாங்கள் உறுதி செய்வோம்.

பயிர்ச் சேத மதிப்பீடு முடிக்கப்பட்டு, இதுவரை 1,902 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ள நிலையில், வழங்கப்பட வேண்டிய மொத்தத் தொகை ரூ.2,313 கோடியாக உள்ளது என்றார்.

பருவமழைக்குப் பிந்தைய மழையால் ஏற்பட்ட பயிர் இழப்பு குறித்து கேள்வி எழுப்பிய அவர், இந்தப் பிரச்னை முன்பு இல்லை, ஆனால் சமீப வருடங்களில் இது போன்று அடிக்கடி நடைபெற்று வருகிறது. இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண மாநில அரசு ஒரு குழுவை அமைக்க முன்மொழிந்துள்ளதாகத் தெரிவித்தார்.

ராபி பயிர் உற்பத்தியை சேதப்படுத்தும் இத்தகைய மழை முன்பு இல்லை. அதே வேளையில், சேதம் ஏற்பட்ட பயிர் இழப்புக்காக இதுவரை விவசாயிகளுக்கு ரூ.760 கோடி வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.