நான்கு கால்களுடன் பிறந்த அதிசய குழந்தை: எங்கே தெரியுமா?

மத்தியப் பிரதேசத்தின், குவாலியரில் பெண் ஒருவருக்கு நான்கு கால்களுடன்கூடிய அதிசய பெண் குழந்தை பிறந்த சம்பவம் அனைவரையும் அதிசயிக்க வைத்துள்ளது. 
நான்கு கால்களுடன் பிறந்த அதிசய குழந்தை: எங்கே தெரியுமா?
Published on
Updated on
1 min read

மத்தியப் பிரதேசத்தின், குவாலியரில் பெண் ஒருவருக்கு நான்கு கால்களுடன்கூடிய அதிசய பெண் குழந்தை பிறந்த சம்பவம் அனைவரையும் அதிசயிக்க வைத்துள்ளது. 

குவாலியரின் சிக்கந்தர் கம்பூ பகுதியைச் சேர்ந்தவர் ஆர்த்தி குஷ்வாஹா. இவர் கமலா ராஜா மருத்துவமனையில் நான்கு கால்களுடன் கூடிய அதிசய குழந்தையைப் பெற்றெடுள்ளார். 

இதுகுறித்து ஜெயரோக்யா மருத்துவமனை குழுமத்தின் கண்காணிப்பாளர் டாக்டர் ஆர்.கே.எஸ்.தாகத் கூறுகையில், 

2.3 கிலோ எடையுடன் கூடிய பெண் குழந்தை நான்கு கால்களுடன் பிறந்துள்ளது.  உடல் ஊனம் உள்ளது. கூடுதல் கரு இரண்டு பகுதிகளாகப் பிரியும்போது உடல் இரண்டு இடங்களில் உருவாகிறது. இது இஸ்கியோபாகஸ் என்று அழைக்கப்படுகிறது. இந்தப் பெண் குழந்தையின் இடுப்புக்குக் கீழே இரண்டு கூடுதல் கால்களுடன் வளர்ந்திருக்கிறது. ஆனால் இரண்டு கால்களும் செயலற்ற நிலையில் உள்ளன. 

உடலில் வேறு ஏதேனும் குறைபாடு உள்ளதா எனக் குழந்தைகள் நலப்பிரிவு மருத்துவர்கள் பரிசோதித்து வருகின்றனர். பரிசோதனைக்குப் பின் குழந்தை நலமாக இருந்தால் அறுவை சிகிச்சை மூலம், அந்த கால்கள் அகற்றப்படும். அதன்பிறகு குழந்தை இயல்பு வாழ்க்கையை வாழ முடியும் என்று அவர் கூறினார். 

குழந்தையின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அறுவை சிகிச்சை குறித்து மருத்துவர்கள் குழு கலந்தாலோசித்து வருகின்றது. பெண் குழந்தை தற்போது பூரண நலத்துடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

கடந்த மார்ச் மாதத்தில் ம.பி.யில் ரத்லாமில் ஒரு பெண்ணுக்கு 2 தலைகள், 3 கைகள் மற்றும் 2 கால்களுடன் பிறந்தது குறிப்பிடத்தக்கது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com