தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

பிரதமர் மோடி குறித்த பூட்டோவின் கருத்துக்கு எதிர்ப்பு: உ.பி. முழுவதும் பாஜக போராட்டம்!

பிரதமர் மோடி குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோவின் தனிப்பட்ட கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து உ.பி. முழுவதும் பாஜவினர் போராட்டம் நடத்துகிறது. 

News image

பிரதமர் மோடி குறித்த பூட்டோவின் கருத்துக்கு எதிர்ப்பு: உ.பி. முழுவதும் பாஜக போராட்டம்!

Updated On :17 டிசம்பர் 2022, 6:35 am

பிரதமர் நரேந்திர மோடி குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோவின் தனிப்பட்ட கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து உத்தரப் பிரதேச மாநிலம் முழுவதும் பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது. 

மாநில பாஜக தலைவர் பூபேந்திர சிங் சௌத்ரி வெள்ளிக்கிழமை மாலை மோடிக்கு எதிரான பூட்டோவின் அறிக்கை "அநாகரீகமானது" மற்றும் "வெட்கக்கேடானது" என்று தெரிவித்துள்ளார். 

மாநிலம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சி சார்பில் சனிக்கிழமை போராட்டம் நடத்தப்படும் என்றார். 

மதுராவில் வெள்ளிக்கிழமை பாஜவினர் போராட்டம் நடத்தி பாகிஸ்தான் அமைச்சரின் உருவ பொம்மையை எரித்தனர். 

மாநில பாஜக பொதுச் செயலாளர் கோவிந்த் நாராயண் சுக்லா கூறுகையில், 

தலைநகர் லக்னௌவில் மதியம் 12 மணியளவில் கட்சியினர் போராட்டம் நடத்துவார்கள். 

பிரதமர் மோடியின் தலைமையில் முழு உலகிலும் வலிமையான நாடாக இந்தியா அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 

அனைத்து முனைகளிலும் தோல்வியடைந்த பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சரின் அறிக்கை, அவரது விரக்தியையும் ஏமாற்றத்தையும் காட்டுகிறது என்று அவர் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.