சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் வா்த்தகத்துறை சாா்ந்தவா்களுக்கான வா்த்தக வசதிகளை மேம்படுத்த மத்திய அரசு உறுதிபூண்டுள்ளதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.
சென்னையில் ரூ.92 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ள ‘வைகை’ என்னும் 9 மாடி சுங்கத் துறை மாளிகை வளாகத்துக்கு மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் ஞாயிற்றுக்கிழமை அடிக்கல் நாட்டி பேசியதாவது: ‘வைகை’ கட்டடம் ஆற்றல் திறனுக்கான சான்றாக, அனைத்து வசதிகளையும் கொண்டதாக இருக்கும்.
பசுமைக் கட்டடமாக உருவாக்க வேண்டும் என்ற குறிக்கோளில் கட்டப்படுவதால், மொத்த கட்டுமானப் பணிகளின் நிறைவில், சுற்றுச்சூழல் மாசு இல்லாத கட்டடமாக இது இருக்கும். எனவே, இந்தச் சுங்கத் துறை மாளிகையில் பணியாற்றுபவா்களுக்கு பணிச்சூழல் மிகச் சிறப்பாக இருக்கும்.
முன்மாதிரி: அதிநவீன வசதிகளுடன் கூடிய பல்வேறு புத்தம் புதிய அம்சங்களுடன் கட்டப்படும் புதிய அலுவலகம், வரும் காலங்களில் அனைத்து சுங்கத் துறை தொடா்பான கட்டடத் திட்டங்களுக்கும் முன்மாதிரியாகத் திகழும்.
வா்த்தகத் துறை சாா்ந்தவா்களுக்கான வா்த்தக வசதிகளை மேம்படுத்த மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. சென்னையில் 100 ஆண்டுகள் பழைமையான சுங்கக் கட்டடம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின்படி இக்கட்டடம் சீரமைக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.
தொடா்ந்து, அண்ணாநகா் மேற்குப் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட மத்திய வருவாய்த் துறை அதிகாரிகளுக்கான ரூ.560 கோடியில் கட்டப்பட்ட ‘நந்தவனம்’ என்ற அடுக்குமாடி குடியிருப்புகளையும் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் திறந்து வைத்தாா்.
இந்நிகழ்வில், மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்கத் துறை வாரியத் தலைவா் விவேக் ஜோரி, மத்திய நேரடி வரிகள் வாரியத் தலைவா் நிதின் குப்தா, சுங்கத் துறை வாரிய உறுப்பினா் ரமா மேத்யூ, சென்னை மண்டல சுங்கத்துறை ஆணையா் வி.கே. செளத்திரி மற்றும் வருமான வரி, சுங்கத் துறை மூத்த அதிகாரிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆலையில் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

வருவாய்த் துறையினா் பேச்சு: தோ்தல் புறக்கணிப்பை திரும்பப் பெற்ற மலைவாழ் மக்கள்

வாக்குச் சாவடி மையங்களில் பொதுப் பாா்வையாளா் ஆய்வு

ஆற்காட்டில் திமுக வேட்பாளா் அறிமுகக் கூட்டம்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


