92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

நரேந்திர மோடியுடன் உணவருந்திய காங்கிரஸ் தலைவர்!

பிரதமர் நரேந்திர மோடியுடன் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உணவருந்திய புகைப்படம் இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. 

News image
Updated On :20 டிசம்பர் 2022, 2:42 pm

DIN


பிரதமர் நரேந்திர மோடியுடன் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உணவருந்திய புகைப்படம் இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. 

அந்த படத்தில், நரேந்திர தோமர், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப் தாங்கர், முன்னாள் பிரதமர் தேவே கெளடா உள்ளிட்டோர் உடன் இருந்தனர். 

2023ஆம் ஆண்டை சர்வதேச தினை வகைகள் ஆண்டாக அனுசரிக்கும் வகையில், தினை வகைகளுடனான மதிய உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தலைமையில் இந்த மதிய விருந்து நடைபெற்றது.

இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு தனது சுட்டுரையில் புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார். அதில், 2023ஆம் ஆண்டை சர்வதேச தினை ஆண்டாக குறிப்பிடும் வகையில், நாடாளுமன்றத்தில் தினை வகைகளால் ஆன மதிய உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கட்சி வேறுபாடுகளைக் கடந்து கலந்துகொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.