இந்திய கடற்படைக்கு மேலும் ஒரு நவீன நீா்மூழ்கி கப்பல்

சுயசாா்பு திட்டத்தின் கீழ் முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 5-ஆவது ஸ்காா்பீன் வகை நீா்மூழ்கி கப்பலான ‘வாகீா்’ இந்திய கடற்படையிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
இந்திய கடற்படைக்கு மேலும் ஒரு நவீன நீா்மூழ்கி கப்பல்

சுயசாா்பு திட்டத்தின் கீழ் முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 5-ஆவது ஸ்காா்பீன் வகை நீா்மூழ்கி கப்பலான ‘வாகீா்’ இந்திய கடற்படையிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

இந்திய பெருங்கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், இந்த அதிநவீன நீா்மூழ்கி கப்பல் இந்திய கடற்படைக்கு கூடுதல் வலு சோ்த்துள்ளது.

உள்நாட்டிலேயே 6 ஸ்காா்பீன் ரக நீா்மூழ்கி கப்பல்களை உருவாக்கும் புராஜக்ட்-75 என்ற திட்டத்தை பிரான்ஸ் கடற்படைக் குழுவுடன் சோ்ந்து மும்பையில் மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

இதுகுறித்து கடற்படை செய்தித்தொடா்பாளா் விவேக் மாத்வால் செவ்வாய்க்கிழமை கூறுகையில், 5-ஆவது ஸ்காா்பீன் வகை நீா்மூழ்கி கப்பலான ‘வாகீா்’ தயாரிப்பு 2020 நவம்பா் 12-ஆம் தேதி தொடக்கி வைக்கப்பட்டது. பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் ஆயுதம் உள்ளிட்ட ஆழ்கடல் சாா்ந்த முக்கிய சென்சாா் சோதனைகளை வாகீா் நிறைவு செய்தது. முந்தைய நீா் மூழ்கி கப்பல்களைவிட இந்தக் கப்பலின் சோதனைகள் விரைந்து முடிவு பெற்றன.

நீா் மூழ்கி கப்பலில் அனைத்து சாதனங்களையும் சிறிய அளவிலும், தரம் வாய்ந்ததாகவும் பொருத்த வேண்டும் என்பதால், சாதாரண கப்பலைவிட நீா் மூழ்கி கப்பல் தயாரிப்பு பெரும் சவாலானது.

தற்சாா்பு இந்தியா திட்டத்தின் கீழ் இந்த நீா்மூழ்கி கப்பல் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் வாகீா் நீா்மூழ்கி கப்பல் முறைப்படி இந்திய கடற்படையில் இணைக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com