காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற தலைவராக நேபாள பிரதமர் தேர்வு!

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற தலைவராக நேபாள பிரதமர் தேர்வு!

நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தேவுபா காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 
Published on

நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தேவுபா காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

நாடாளுமன்றக் கட்சித் தலைவர் தேர்தலில் கட்சியின் பொதுச் செயலாளர் ககன் குமார் தாபாவை 39 வாக்குகள் வித்தியாசத்தில் பிரதமர் தேவுபா 
வெற்றி பெற்றுள்ளார். 

கட்சியின் 89 சட்டமன்ற உறுப்பினர்களும் வாக்கெடுப்பில் கலந்துகொண்ட நிலையில், 76 வயதான தேவுபா 64 வாக்குகளையும், 45 வயதான தாபாவால் 25 வாக்குகளையும் கைப்பற்றினர். 

நேபாளத்தில் நவம்பர் 20-ம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் நேபாள காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பிறகு, தேவுபா அடுத்த அரசாங்கத்தை வழிநடத்துவார் என்பதே இந்த தேர்தலின் வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com