எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

வெறுப்புச் சந்தையில் அன்பெனும் கடையைத் திறந்துள்ளேன்: ராகுல் காந்தி

ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்று வரும் ஒற்றுமை நடைப்பயணம் 108வது நாளாக நடைபெற்று வருகிறது.

News image
ராகுல் காந்தி
Updated On :24 டிசம்பர் 2022, 2:50 am

DIN


வெறுப்புச்சந்தையில் அன்பு எனும் கடையை நான் திறந்துள்ளேன் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்று வரும் ஒற்றுமை நடைப்பயணம் 108வது நாளாக நடைபெற்று வருகிறது. ஹரியாணாவில் தொடங்கி, நாட்டின் தலைநகரான தில்லியில் ஒற்றுமைப் பயணம் நுழைகிறது. இதில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள், ஏராளமான தொண்டர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதனிடையே தொண்டர்கள் மத்தியில் பேசிய ராகுல் காந்தி, சிலர் நாட்டு மக்களிடையே வெறுப்புணர்வை பரப்புகின்றனர். ஆனால், சாமானியர்கள் தற்போது அன்பைப் பற்றி பேசத்தொடங்கியுள்ளனர். எல்லா மாநிலங்களிலும் லட்சக்கணக்கான மக்கள் ஒற்றுமை நடைப்பயணத்தில் கலந்துகொண்டனர். ஆர்.எஸ்.எஸ். - பாஜகவுக்கு ஒன்று சொல்லிக்கொள்கிறேன், வெறுப்புணர்வு எனும் உங்களில் சந்தையில் நான் அன்பு எனும் கடையைத் திறந்துள்ளேன். எனக்கு மக்கள் ஆதரவு கிடைக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, ஒற்றுமை நடைப்பயணம் இன்று தில்லியில் நுழையவுள்ளதைத் தொடர்ந்து, ராகுல் காந்தி மற்றும் நடைப்பயணம் மேற்கொண்டுள்ள தொண்டர்களை வரவேற்கும் விதமாக பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மக்கள் ஆட்டம் பாட்டத்துடன் நடைப்பயணத்துக்கு தயாராகி வருகின்றனர். மாலை 4 மணி வரை மட்டுமே நடைப்பயணம் மேற்கொள்ள வேண்டும் என தில்லி மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.