தேர்தல் தோல்வி: கத்தியுடன் மக்களை கதிகலங்கச் செய்யும் வேட்பாளர்

மகாராஷ்டிரத்தில் ஊராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவர், தான் தோற்றுப்போனதால் அந்த ஊராட்சி மக்களை கத்தியை வைத்து மிரட்டி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

மகாராஷ்டிரத்தில் ஊராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவர், தான் தோற்றுப்போனதால் அந்த ஊராட்சி மக்களை கத்தியை வைத்து மிரட்டி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரத்தின் அகோலா மாவட்டத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. அகோலா மாவட்டத்தின் காம்கேத் கிராமத்தில் ஒருவர் கையில் கத்தியை வைத்துக் கொண்டு கிராம மக்களை அச்சுறுத்தி வரும் விடியோ நேற்று (டிசம்பர் 24) சமூக ஊடகங்களில் வைரலானது. இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் கூறியதாவது: கிராம மக்களை கத்தியை வைத்துக் கொண்டு மிரட்டி வந்த அந்த நபர் அண்மையில் நடைபெற்ற ஊராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்டுள்ளார். ஆனால், அந்தத் தேர்தலில் தோல்வியைத் தழுவியுள்ளார். தேர்தலில் தோல்வியடைந்ததால் அவர் மிகுந்த மன வருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால், அவர் கிராம மக்களை பார்த்து தொடர்ந்து தகாத முறையில் திட்டி வந்ததாக கூறப்படுகிறது. பின்னர், அவர் கையில் ஒரு கத்தியை வைத்துக் கொண்டு கிராம மக்களை அச்சுறுத்தி வந்துள்ளார். அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஊராட்சி மன்றத் தேர்தலில் கடந்த 30 ஆண்டுகளாக வெற்றி பெற்று வருகின்றனர். அதனால், அவரது இந்தத் தோல்வி அவரை பெரிதும் பாதித்துள்ளதாகத் தெரிகிறது. ஆயுதத்துடன் மக்களை அச்சுறுத்தி வந்த அவர் மீது உரிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com