இந்தியை வளர்க்க, அதை பிறர் மேல் திணிப்பது அறிவீனம்: கமல் ட்வீட்

இந்தியை வளர்க்க, அதை பிறர் மேல் திணிப்பது அறிவீனம். திணிக்கப்படுபவை எதிர்க்கப்படும் என நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read


சென்னை: இந்தியை வளர்க்க, அதை பிறர் மேல் திணிப்பது அறிவீனம். திணிக்கப்படுபவை எதிர்க்கப்படும் என நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் ட்டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது: 

தாய்மொழி எமது பிறப்புரிமை. பிறமொழிகளைப் பயில்வதும் பயன்படுத்துவதும் தனிப்பட்ட விருப்பத்தின் பேரில்தான் நிகழும்.

75 ஆண்டுகளாக இதுதான் தென்னிந்தியாவின் உரிமைக்குரல். வடகிழக்கும் இதையே பிரதிபலிக்கும். இந்தியை வளர்க்க, அதை பிறர் மேல் திணிப்பது அறிவீனம். திணிக்கப்படுபவை எதிர்க்கப்படும் என கூறியுள்ளார்.

மேலும், இதையே கேரளமும் பிரதிபலிக்கின்றது என்பது பாதி இந்தியாவிற்கான சோற்றுப் பதம். பொங்கல் வருகிறது எச்சரிக்கை. ஓ! மன்னிக்கவும் உங்களுக்குப் புரிவதற்காக “ஜாக்த்தே ரஹோ” என்று கூறியுள்ளார். 

கேரளம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் நாடாளுமன்றத்தில் இந்தியை பயிற்றுமொழியாக்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு எதிராக பேசிய விடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகரிந்து, இந்தியை திணிக்கும் உங்களின் கேவலமான வடிவமைப்பு இந்த நாட்டை சீரழித்துவிடும். ஐஐடி-இல் இந்தியில் தேர்வு எழுத வேண்டும் என்றால், கூகுளின் தலைமை பொறுப்பில் சுந்தர் பிச்சை இருதிருக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com