
கர்நாடகத்தில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படவுள்ளதாக முதல்வர் பசவராஜ் பொம்மை திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் 2019ஆம் ஆண்டு எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சி அமைத்த நிலையில், 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் பசவராஜ் பொம்மை முதல்வராக நியமிக்கப்பட்டு புதிய அமைச்சரவை ஆகஸ்ட் மாதத்தில் பதவியேற்றுக் கொண்டது.
இந்நிலையில், கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் நான்கு மாதங்களே உள்ள நிலையில், மீண்டும் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படவுள்ளதாக பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | எம்எல்ஏ குடியிருப்பில் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை!
இன்று செய்தியாளர்களை சந்தித்த பசவராஜ் பொம்மை, “தில்லி சென்று பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா, அமித் ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்களை சந்திக்கவுள்ளேன். அமைச்சரவை விரிவாக்கம் மற்றும் சட்டப்பேரவை தேர்தல் குறித்து ஆலோசனை செய்யவுள்ளேன்” எனத் தெரிவித்தார்.
கர்நாடகத்தில் புதிய அமைச்சரவை பதவியேற்று ஒரே ஆண்டில் மீண்டும் அமைச்சரவை விரிவாக்கம் செய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.