இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

தில்லி மருத்துவமனைகளில் கரோனா தடுப்பு ஒத்திகை: துணை முதல்வர் ஆய்வு!

தில்லி மருத்துவமனைகளில் கரோனா எதிர்கொள்வதற்கான ஒத்திகை நடைபெற்று வரும் நிலையில், அம்மாநில முதல்வர் மணீஷ் சிசோடியா இன்று ஆய்வு மேற்கொண்டார். 

News image
Updated On :27 டிசம்பர் 2022, 10:24 am

DIN

தில்லி மருத்துவமனைகளில் கரோனா எதிர்கொள்வதற்கான ஒத்திகை நடைபெற்று வரும் நிலையில், அம்மாநில முதல்வர் மணீஷ் சிசோடியா இன்று ஆய்வு மேற்கொண்டார். 

நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் கரோனா அவசரக்கால ஒத்திகை நடைபெற்று வருகிறது. 

சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் கரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதையடுத்து கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. சர்வதேச விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஐந்து நாடுகளிலிருந்து இந்தியா வருவோருக்கு கரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாட்டில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளின் தயார்நிலையை உறுதி செய்யும் நோக்கில் பல மாநிலங்களின் மருத்துவமனைகளில் செவ்வாய்க்கிழமை சுகாதார ஒத்திகை நடைபெற்று வருகிறது. ஒத்திகைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது.

மருத்துவமனைகளில் உள்ள சுகாதார வசதிகள், நோயாளிகளைத் தனிமைப்படுத்துவதற்கான படுக்கை வசதிகள், மருத்துவ ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள், அவசர சிகிச்சைக்கான படுக்கைகள், செயற்கை சுவாசக் கருவி இணைக்கப்பட்டுள்ள படுக்கைகள், போதிய எண்ணிக்கையிலான மருத்துவா்கள், செவிலியா்கள், சுகாதாரப் பணியாளா்கள் உள்ளிட்ட மற்ற முன்களப் பணியாளா்கள் குறித்து ஒத்திகையின்போது ஆய்வு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தில்லியில் உள்ள எல்என்ஜேபி மருத்துவமனையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துணை முதல்வர் சிசோடியா ஆய்வு செய்தார். 

தற்போது, நகரத்தில் தினமும் சுமார் 2,500 முதல் 3,000 சோதனைகள் நடத்தப்படுகின்றன. கரோனா பரிசோதனை விரைவில் அதிகரிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.