நாஸ்காம் புதிய தலைவா் நியமனம்மேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்மேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

பிரதமர் மோடியுடன் கேரள முதல்வர் சந்திப்பு! 

தேசிய தலைநகரில் கேரள முதல்வர் பினராயி விஜயன் பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தில் இன்று(டிச.27) சந்தித்துப் பேசினார். 

News image
Updated On :27 டிசம்பர் 2022, 12:52 pm

தேசிய தலைநகரில் கேரள முதல்வர் பினராயி விஜயன் பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தில் இன்று(டிச.27) சந்தித்துப் பேசினார். 

இந்த சந்திப்பின் முக்கியத்துவமாக, கேரள அரசின் பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசு இன்னும் ஒப்புதல் அளிக்காததையடுத்து, பிரதமர் மோடியை பினராயி விஜயன் நேரில் சந்தித்து பேசியுள்ளார். 

மேலும். கேரள வனத்தை ஒட்டிய ஒரு கிலோ மீட்டர் தொலைவுப் பகுதிகள் சுற்றுச்சூழல் மண்டலமாக அறிவிக்கப்பட்டிருப்பதற்கு மக்கள் மத்தியில் எழுந்துள்ள எதிர்ப்பு குறித்து எடுத்துக் கூறினார். இந்த விஷயத்தில் கேரள அரசுக்கு மத்திய அரசுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். 

மேலும், காசர்கோட்டில் இருந்து திருவனந்தபுரம் வரையிலான அதிவேக ரயில் பாதை திட்டத்திற்கு இன்னும் அரசு அனுமதி வழங்காதது குறித்தும் பிரதமரிடம் குறிப்பிட்டார்.

Story image

இந்த சந்திப்பின்போது, பிரதமர் மோடிக்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் நினைவுப் பரிசு ஒன்றையும் அளித்துள்ளார். 

தில்லியில் இன்று நடைபெறும் சிபிஎம் கட்சியின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக கேரள முதல்வர் தலைநகர் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.