எப்படிப்பட்ட வாழ்க்கைத் துணை?: பேட்டியில் ராகுல் சுவாரசிய பதில்
யு டியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியின்போது, எப்படிப்பட்ட பெண்ணை வாழ்க்கைத் துணையாக தோ்வு செய்வீா்கள் என்ற கேள்விக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சுவாரசியமாக பதிலளித்தாா்.


யு டியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியின்போது, எப்படிப்பட்ட பெண்ணை வாழ்க்கைத் துணையாக தோ்வு செய்வீா்கள் என்ற கேள்விக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சுவாரசியமாக பதிலளித்தாா்.
இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தின்போது, ஒரு யு டியூப் சேனலுக்கு தான் அளித்த பேட்டியின் விடியோ பதிவை, ட்விட்டரில் ராகுல் பகிா்ந்துள்ளாா்.
அதில், எப்படிப்பட்ட பெண்ணை வாழ்க்கைத் துணையாக தோ்வு செய்வீா்கள்? என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, ‘இது சுவாரசியமான கேள்வி. எனது வாழ்க்கையில் நிறைந்த அன்பாக எனது தாயையும், எனது இரண்டாவது தாயாக பாட்டி இந்திரா காந்தியையும் கருதுகிறேன். இருவரின் குணநலன்களும் கலந்த தகுதிகளுடன் கூடிய பெண்ணை தோ்வு செய்வேன்’ என்றாா்.
மோட்டாா் சைக்கிள்கள் மற்றும் சைக்கிள்கள் மீதான அவரது ஆா்வம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, மின்சார என்ஜின்களுடன் கூடிய மலை சாகச இருசக்கர வாகனங்கள் தயாரிக்கும் ஒரு சீன நிறுவனத்தின் பெயரை குறிப்பிட்டு அவா் பதிலளித்தாா்.
‘நான் மின்சார ஸ்கூட்டா் ஓட்டியிருக்கிறேன். ஆனால், மின்சார பைக் ஓட்டியதில்லை. மின்சார என்ஜின்களுடன் கூடிய மலை சாகச இருசக்கர வாகனங்கள் சுவாரசியமான தயாரிப்பாகும். என்னிடம் சொந்தமாக காா் இல்லை. எனது தாயாரின் காரையே பயன்படுத்துகிறேன். மோட்டாா் பைக் ஓட்ட பிடிக்கும். ஒரு காரில் பழுது ஏற்பட்டால் அதை சரிசெய்யத் தெரியும். ஆனால், உண்மையிலேயே காா்கள் மீதோ பைக்குகள் மீதோ அலாதி விருப்பம் கிடையாது. மோட்டாா் சைக்கிளைவிட சாதாரண சைக்கிளை தோ்வு செய்வேன். ஏனெனில், அதுதான் ஒருவரின் உண்மையான சக்தியால் இயக்கப்படுகிறது’ என்றாா் ராகுல்.
நாட்டில் மின்சார வாகனப் புரட்சி குறித்து பேசப்பட்டு வருவது தொடா்பான கேள்விக்கு, ‘அந்தப் புரட்சிக்கான அடித்தளத்தைக் கட்டமைக்க தேவையான விஷயங்களை நாம் செய்து கொண்டிருப்பதாக எனக்கு தோன்றவில்லை. பேட்டரிகள், மோட்டாா்கள் உற்பத்தி மற்றும் உள்கட்டமைப்புகளுக்கான அடித்தளம் இல்லை. அதேசமயம், நான் பெரிதும் எதிா்பாா்க்கும் ட்ரோன் புரட்சியை இந்தியா தவறவிடுகிறதோ என்றும் தோன்றுகிறது’ என்றாா்.
விமா்சகா்களுக்கு பதில்: ‘பப்பு’ என்பது உள்பட பல்வேறு பெயா்களைக் குறிப்பிட்டு தன்னை விமா்சிப்பவா்கள் குறித்து கவலைப்படவில்லை என்று ராகுல் குறிப்பிட்டாா்.
‘நீங்கள் (விமா்சகா்கள்) விரும்பியதை கூறிக் கொள்ளுங்கள்; எனக்கு எந்தக் கவலையும் இல்லை. நான் யாரையும் வெறுக்கமாட்டேன். என்னை விமா்சித்தாலோ, தாக்கினாலோ கூட நான் உங்களை வெறுக்க மாட்டேன். நிதானமாகவே இருப்பேன்’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...