யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

பிரபல நடிகையை சுட்டுக் கொன்று நாடகமாடிய கணவர்: காட்டிக்கொடுத்த குழந்தை

நடிகை ரியா குமாரி மரணத்தில் திடீர் திருப்பமாக அவரது கணவரே சுட்டுக் கொன்றுவிட்டு கொள்ளையர்கள் கொன்றதாக நாடகமாடியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

News image
கோப்புப் படம்
Updated On :30 டிசம்பர் 2022, 10:48 am

DIN


ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல நடிகை ரியா குமாரி மரணத்தில் திடீர் திருப்பமாக அவரது கணவரே சுட்டுக் கொன்றுவிட்டு கொள்ளையர்கள் கொன்றதாக நாடகமாடியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இஷா ஆலியா என்று திரையுலகில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் ரியா குமாரி. இவர் புதன்கிழமை தேசிய நெடுஞ்சாலையில் கணவர் பிரகாஷ் குமார் மற்றும் இரண்டரை வயது குழந்தையுடன் சென்று கொண்டிருந்த போது கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாக கணவர் புகார் அளித்திருந்தார்.

இந்த நிலையில், பிரகாஷ் குமாரிடம் நடத்தப்பட்ட விசாரணை மற்றும் ரியா குமாரியின் பெற்றோர் அளித்த புகாரின் கீழ் அவரை கைது செய்த காவல்துறையினர் உரிய முறையில் விசாரணை நடத்தினர்.

மேலும், சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகள் மற்றும் குழந்தையிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதில் மிக முக்கிய துப்பு கிடைத்த நிலையில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.

விசாரணையில், மனைவி தன்னை மதிக்காததால், அவளை சுட்டுக் கொன்றுவிட்டு, கொள்ளையர்கள் சுட்டுக் கொன்றதாக நாடகமாடியதையும் ஒப்புக் கொண்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.