மேற்குவங்கத்தில் வந்தே பாரத் ரயில் சேவையை தொடக்கிவைத்தார் பிரதமர் மோடி!

மேற்கு வங்க மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயிலை பிரதமா் நரேந்திர மோடி இன்று கொடியசைத்து தொடக்கிவைத்தார். 
மேற்குவங்கத்தில் வந்தே பாரத் ரயில் சேவையை தொடக்கிவைத்தார் பிரதமர் மோடி!

மேற்கு வங்க மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயிலை பிரதமா் நரேந்திர மோடி இன்று கொடியசைத்து தொடக்கிவைத்தார். 

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி(100) உடல்நலக்குறைவால் இன்று(டிச.30) காலமானார். 

தாயார் மறைவையடுத்து ஆமதாபாத் வந்த பிரதமர் மோடி, காந்தி நகரில் உள்ள இல்லத்தில் தாயாரின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் தாயின் உடலை சுமந்து வந்து இறுதிச் சடங்கு செய்தார்.

இதையடுத்து திட்டமிட்டபடி பிரதமர் மோடி இன்றைய அரசு நிகழ்ச்சிகளில் காணொலி வழியாக பங்கேற்கிறார். 

அதன்படி, மேற்கு வங்க மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயிலை பிரதமா் நரேந்திர மோடி இன்று கொடியசைத்து தொடக்கிவைத்தார். ஹௌரா- நியூ ஜல்பைகுரி இடையே இந்த ரயில் இயக்கப்பட இருக்கிறது.

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அதிநவீன ரயிலான வந்தே பாரத், முன்னதாக தில்லி-வாராணசி, தில்லி-ஜம்மு, மும்பை-காந்திநகா், சென்னை-மைசூரு உள்ளிட்ட 6 தடங்களில் தொடங்கப்பட்டு இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக நிகழ்ச்சியில் பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்து பிரதமர் மோடிக்கு ஆறுதல் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com