டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

உ.பி.யில் அமித் ஷா வீடுவீடாகச் சென்று தேர்தல் பிரசாரம்

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று புடாவுன் தொகுதியில் வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார். 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 8:17 am

DIN

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று புடாவுன் தொகுதியில் வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார். 

உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

இதில், உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தோ்தல் பிப்ரவரி 10-ஆம் தேதி முதல் மாா்ச் 7-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது.  இதையொட்டி கட்சிகள் அங்கு தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

பாஜக சார்பில், பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, மூத்த மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி, ஸ்மிருதி ராணி, தர்மேந்திர பிரதான், முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோரின் பெயர்கள் உ.பி. தேர்தல் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. 

இதில்,  பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா, அமித் ஷா ஆகியோர் அங்கு தொடர்ந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று புடாவுன்(Budaun) தொகுதியில் வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார். 

அதைத் தொடர்ந்து அட்ராலி(Atrauli) பகுதியில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்திலும் கலந்துகொண்டு பேசினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.