கரோனாவிலிருந்து மீண்ட பிறகும் விடாது துரத்தும் இருமல்? அலட்சியம் வேண்டாம்

பேசினாலே இருமல், திடீரென பயங்கர இருமல் என இருமலில் எத்தனை ரகம் உண்டோ அத்தனையும் கரோனாவுக்குப் பிந்தைய பிரச்னைகளாக இன்னமும் உள்ளன.
கரோனாவிலிருந்து மீண்ட பிறகும் விடாது துரத்தும் இருமல்? அலட்சியம் வேண்டாம்
கரோனாவிலிருந்து மீண்ட பிறகும் விடாது துரத்தும் இருமல்? அலட்சியம் வேண்டாம்


ஹைதராபாத்: பேசினாலே இருமல், திடீரென பயங்கர இருமல் என இருமலில் எத்தனை ரகம் உண்டோ அத்தனையும் கரோனாவுக்குப் பிந்தைய பிரச்னைகளாக இன்னமும் உள்ளன.

கரோனாவிலிருந்து மீண்ட ஏராளமானோர் கூறுவது என்னவென்றால், கரோனாவிலிருந்து மீண்டு ஒரு சில வாரங்கள் ஆகிவிட்டன. ஆனால், வறட்டு இருமலும், தொடர் இருமலும் இன்னமும் விடவில்லை என்கிறார்கள்.

கரோனாவுக்குப் பிந்தைய காலத்தில் பலருக்கும் இருமல் இருக்கிறது. ஆனாலும் அதனை அலட்சியம் செய்ய வேண்டாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

அதாவது, மருத்துவக் கூற்றுப்படி, எந்த ஒரு இருமலும் 10 - 14 நாள்களுக்கு மேலும் நீடித்தால், நிச்சயம் மருத்துவரை நாட வேண்டும். வறட்டு இருமல் என்பது, உடலில் ஏற்பட்ட தொற்று பாதிப்பு அல்லது வைரஸால் தொண்டையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக உருவாகலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

கேர் மருத்துவமனை மருத்துவர் நவோதயா கில்லா இது பற்றி கூறுகையில், தொடர் மற்றும் கடுமையான இருமலுக்கு இருமல் மருந்துகளும், சுடு தண்ணீர் அல்லது வீட்டு வைத்தியங்களே பலனளிக்கும்.

பொதுவாக ஏதேனும் தொற்று பாதிக்கும்போது அதனால் நோய் எதிர்பாற்றல் குறையும் போது மற்றொரு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, 14 நாள்களுக்கும் மேல் தொடர்ந்து இருமல் இருந்தால் மருத்துவரை நாட வேண்டும். அலட்சியம் வேண்டாம் என்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com