தடாலடியாக இப்படிச் செய்ய வேண்டாம்: எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு

பல நாடுகளில் கரோனா பரவல் கட்டுப்பாட்டு நடைமுறைகள் அமல்படுத்தப்பட்ட நிலையில், அதனை படிப்படியாக, மிகப் பொறுமையாக தளர்த்திக் கொள்ள உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்
தடாலடியாக இப்படிச் செய்ய வேண்டாம்: எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு
தடாலடியாக இப்படிச் செய்ய வேண்டாம்: எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு


ஜெனீவா: கரோனா பாதிப்பு அதிகரித்ததால், பல நாடுகளில் கரோனா பரவல் கட்டுப்பாட்டு நடைமுறைகள் அமல்படுத்தப்பட்ட நிலையில், அதனை ஒரு சீரான முறையில், மிகப் பொறுமையாக தளர்த்திக் கொள்ள உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

சுமார் 10 வாரங்களுக்கு முன்பு, முதல் ஒமைக்ரான் வகை கரோனா தொற்று கண்டறியப்பட்டது. உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரத்தின்படி, சுமார் 9 கோடிப் பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகின் பல்வேறு பகுதிகளிலும் தற்போது கரோனாவுக்கு பலியாவோர் விகிதமும் அதிகரித்திருப்பது கவலை தருவதாக உள்ளது என்று செய்தியாளர் சந்திப்பின்போது, உலக சுகாதார நிறுவனத்தின் பொது இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.

மேலும், சில நாடுகள் அதிக கரோனா தடுப்பூசிகள் போட்டிருப்பதால், கரோனா கட்டுப்பாடுகளை விலக்கிக் கொண்டுள்ளன. தற்போதைக்கு எந்த நாட்டையும் பொது முடக்கங்களிலிருந்து வெளியே வருமாறு நாங்கள் கூறவில்லை. ஆனால், அனைத்து நாடுகளும் தங்கள் மக்களை வெறும் தடுப்பூசி மட்டுமல்லாமல், அனைத்து வழிகளையும் பின்பற்றி பாதுகாக்குமாறு அறிவுறுத்துகிறோம். எந்த நாடும் கரோனாவை வென்றுவிட்டதாக அறிவிப்பது இப்போதைக்கு உகந்த நேரமல்ல என்று கூறினார்.

உலக சுகாதார நிறுவனத்தின் சுகாதார பேரிடர் கால திட்ட தொழில்நுட்பத் தலைவர் டாக்டர் மரியா வான் கெர்கோவ் கூறுகையில், கடந்த 7 நாள்களில் மட்டும் உலகளவில் 2.2 கோடி பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. இதில் பெரும்பாலான பாதிப்பு ஒமைக்ரான் பாதிப்பாகும். கடந்த 4 வாரங்களில் மட்டும் கரோனா பாதிப்பு கடுமையாக அதிகரித்துள்ளது. 

இன்னும் சில நாடுகளில் ஒமைக்ரான் பாதிப்பு உச்சமடையவில்லை. எனவே, அனைத்துக் கட்டுப்பாடுகளையும் ஒரேயடியாக நீக்குவது இப்போதைக்கு சரியல்ல, எந்தெந்த நாடுகள் கட்டுப்பாடுகளை தளர்த்த நினைக்கின்றனவோ, அவை படிப்படியாக, நிதானத்துடன் கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com