இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

மேற்குவங்கத்தில் 8 - 12 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு

மேற்குவங்கத்தில் 8 முதல் 12 வகுப்பு வரையுள்ள பள்ளி மாணவர்களுக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. 

News image
கோப்புப்படம்
Updated On :3 பிப்ரவரி 2022, 7:53 am

DIN

மேற்குவங்கத்தில் 8 முதல் 12 வகுப்பு வரையுள்ள பள்ளி மாணவர்களுக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. 

நாடு முழுவதும் ஒமைக்ரான் பரவல் குறைந்துள்ளதையடுத்து படிப்படியாக பள்ளிகள், கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் மீண்டும் தொடங்கப்பட்டு வருகின்றன. 

அந்தவகையில், மேற்குவங்கத்தில் 8 முதல் 12 வகுப்பு வரையுள்ள பள்ளி மாணவர்களுக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் பிப்ரவரி 3 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று கடந்த வாரம் முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்தார். 

அதன்படி இன்று மேற்குவங்கத்தில் 8 முதல் 12 வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. 

ஆரம்பப் பள்ளிகளைத் திறப்பது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் என்றும் முதல்வர் கூறியது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.