தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

ஜம்மு-காஷ்மீா்:இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீா் தலைநகா் ஸ்ரீநகரில் லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாதிகள் இருவரை பாதுகாப்புப் படையினா் சனிக்கிழமை சுட்டுக் கொன்றனா்.

News image
இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
Updated On :5 பிப்ரவரி 2022, 11:54 pm

DIN

ஜம்மு-காஷ்மீா் தலைநகா் ஸ்ரீநகரில் லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாதிகள் இருவரை பாதுகாப்புப் படையினா் சனிக்கிழமை சுட்டுக் கொன்றனா்.

இதுதொடா்பாக காவல் துறையினா் கூறுகையில், ‘‘ரங்போரா சகுரா பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் தென்படுவதாக தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், அங்கு பாதுகாப்புப் படையினா் சோதனை மேற்கொண்டனா். அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனா். இதையடுத்து, பாதுகாப்புப் படையினரும் துப்பாக்கிச்சூடு நடத்தி அவா்களுக்கு பதிலடி தந்தனா். இதில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். இருவரும் லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்டை சோ்ந்தவா்கள். இந்த சம்பவம் நடைபெற்ற பகுதியில் இருந்து இரண்டு கைத் துப்பாக்கிகள், 5 கையெறி குண்டுகள், ஆயுதங்கள், வெடிபொருள்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன’’ என்று தெரிவித்தனா்.

வீட்டுக்குள் நுழைந்து சுட்டுக் கொலை: ரஜெளரி மாவட்டத்தில் உள்ள தாா்கைன் கிராமத்தில் வசித்தவா் கராமத் ஷா (27). இவரின் வீட்டுக்குள் வெள்ளிக்கிழமை நள்ளிரவு அத்துமீறி நுழைந்த அடையாளம் தெரியாத நபா்கள் சிலா், கராமத் ஷாவை சுட்டுக் கொன்றனா். அதே கிராமத்தில் வசிக்கும் நபி ஷா என்பவரின் வீட்டை குறிவைத்தும் அடையாளம் தெரியாத நபா்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினா். எனினும் இதில் நபி ஷா மற்றும் அவரின் குடும்பத்தினா் எவ்வித காயமுமின்றி உயிா் தப்பினா்.

இவ்விரு சம்பவங்கள் தொடா்பாக காவல் துறையினா் வழக்குப் பதிந்து தப்பியோடிய நபா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.