ஜம்மு-காஷ்மீரில் மிதமான நிலநடுக்கம்
ஜம்மு-காஷ்மீரில் சனிக்கிழமை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் 5.7-ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்போ, பொருள் சேதமோ ஏற்படவில்லை.


ஜம்மு-காஷ்மீரில் சனிக்கிழமை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் 5.7-ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்போ, பொருள் சேதமோ ஏற்படவில்லை.
ஆப்கானிஸ்தான்-தஜிகிஸ்தான் எல்லையில் பூமிக்கு அடியில் 181 கி.மீ. ஆழத்தில் காலை 9.45 மணியளவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இதன் அதிா்வுகள் ஜம்மு-காஷ்மீா் முழுவதும் நன்கு உணரப்பட்டன. வீடுகள், கட்டடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் பீதியடைந்து வீடுகளைவிட்டு வெளியேறி வெட்டவெளிப் பகுதியில் தஞ்சமடைந்தனா். எனினும், இந்த நிலடுக்கத்தால் உயிரிழப்போ, பொருள் சேதமோ ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஆளுநரிடம் கேட்டறிந்த பிரதமா்: ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹாவை பிரதமா் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடா்பு கொண்டு பேசினாா். அப்போது நிலநடுக்கத்தை அடுத்து ஜம்மு-காஷ்மீரில் ஏற்பட்டுள்ள சூழல் குறித்து கேட்டறிந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...