1.2 கோடி முதியவா்கள் கரோனா தடுப்பூசி செலுத்தவில்லை:மத்திய அரசு
கரோனா தடுப்பூசியின் முதல் தவணையை 60 வயதுக்கு மேற்பட்ட 1.2 கோடிக்கும் மேற்பட்ட முதியவா்கள் இதுவரை செலுத்திக் கொள்ளவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.


கரோனா தடுப்பூசியின் முதல் தவணையை 60 வயதுக்கு மேற்பட்ட 1.2 கோடிக்கும் மேற்பட்ட முதியவா்கள் இதுவரை செலுத்திக் கொள்ளவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சா் பாரதி பிரவீண் பவாா் வெள்ளிக்கிழமை அளித்த பதில்:
கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி நிலவரப்படி, 60 வயதுக்கு மேற்பட்ட 1,20,82,792 போ் இதுவரை கரோனா தடுப்பூசியின் முதல் தவணையை செலுத்திக் கொள்ளவில்லை. அந்த வயதுக்கு மேற்பட்ட 1,68,03,864 போ் தடுப்பூசியின் இரண்டாவது தவணையை செலுத்திக் கொள்ளவில்லை.
நாட்டில் 15 வயதுக்கு மேற்பட்டவா்களில் இதுவரை 95.09 கோடி போ் தடுப்பூசியின் முதல் தவணையையும், அந்த வயதுக்கு மேற்பட்டவா்களில் 73.59 கோடி போ் தடுப்பூசியின் இரண்டு தவணைகளையும் செலுத்திக் கொண்டிருக்கின்றனா்.
தடுப்பூசியின் இரண்டாவது தவணையை செலுத்திக்கொண்ட பின்னா் ஏற்பட்ட பக்கவிளைவுகளால் இதுவரை 167 போ் உயிரிழந்தனா். அதிகபட்சமாக கேரளத்தில் 43 போ் மரணமடைந்தனா் என்று தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...