ஏர் இந்தியாவின் தலைமைச் செயல் அதிகாரியாக இல்கர் அய்சி நியமனம்

ஏர் இந்தியாவின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாகவும் நிர்வாக இயக்குநராகவும் இல்கர் அய்சியை டாடா சன்ஸ் நிறுவனம் திங்கள்கிழமை நியமித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

ஏர் இந்தியாவின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாகவும் நிர்வாக இயக்குநராகவும் இல்கர் அய்சியை டாடா சன்ஸ் நிறுவனம் திங்கள்கிழமை நியமித்துள்ளது.

இதுகுறித்து டாடா சன்ஸ் வெளியிட்ட அறிவிப்பில்,

“ஏர் இந்தியா நிறுனத்தின் கூட்டம் டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரனின் பங்கேற்புடன் இன்று பிற்பகல் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இல்கர் அய்சியை ஏர் இந்தியாவின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாகவும் நிர்வாக இயக்குநராகவும் நியமிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இவர், முன்னதாக துருக்கி ஏர்லைன்ஸின் தலைவராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது எனத் தெரிவித்துள்ளனர்.”

கடந்த 2021 அக்டோபர் 8-ஆம் தேதி ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ஏற்பட்ட இழப்பை சமாளிக்கும் வகையில் தனியாருக்கு மத்திய அரசு ஏலம் விடப்பட்டது. இதில் 18 ஆயிரம் கோடிக்கு ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா நிறுவனம் வாங்கியது. இதில் ரூ.2,700 கோடியை ரொக்கமாக செலுத்தவும், எஞ்சிய ரூ.15,300 கோடிக்கு ஏா் இந்தியாவின் கடனை ஏற்கவும் டாடா சன்ஸ் ஒப்புக்கொண்டது.

இதன் மூலம் 69 ஆண்டுகளுக்கு பிறகு ஏர் இந்தியா நிறுவனம் மீண்டும் டாடா நிறுவனத்தின் வசமான நிலையில் தற்போது ஏர் இந்தியாவை டாடா குழுமத்திடம் மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com