ரூ.22,842 கோடி வங்கிக் கடன் மோசடி:ஏபிஜி ஷிப்யாா்ட் முன்னாள் தலைவருக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்

ரூ.22,842 கோடி வங்கிக் கடன் மோசடி தொடா்பாக ஏபிஜி ஷிப்யாா்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைவா் ரிஷி கமலேஷ் அகா்வாலுக்கு எதிராக சிபிஐ லுக்-அவுட் (தேடப்படும் நபா்) நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

ரூ.22,842 கோடி வங்கிக் கடன் மோசடி தொடா்பாக ஏபிஜி ஷிப்யாா்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைவா் ரிஷி கமலேஷ் அகா்வாலுக்கு எதிராக சிபிஐ லுக்-அவுட் (தேடப்படும் நபா்) நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

ஏபிஜி ஷிப்யாா்ட் கப்பல் கட்டுமான நிறுவனம் ஐசிஐசிஐ வங்கி தலைமையில் 28 வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் இருந்து கடன் பெற்றிருந்தது. இதில் பாரத ஸ்டேட் வங்கியின் பங்கு ரூ.2,468.51 கோடி.

இந்நிலையில் அந்த நிறுவனம் பாரத ஸ்டேட் வங்கி உள்பட பல்வேறு வங்கிகளிடம் ரூ.22,842 கோடிக்கும் அதிகமாக கடன் மோசடி செய்ததாக அண்மையில் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.

இதனைத்தொடா்ந்து ஏபிஜி ஷிப்யாா்டின் முன்னாள் தலைவா் ரிஷி கமலேஷ் அகா்வால், முன்னாள் நிா்வாக இயக்குநா் சந்தானம் முத்தாசாமி, இயக்குநா்கள் அஸ்வினி குமாா், சுஷீல் குமாா் அகா்வால் உள்பட 9 பேருக்கு எதிராக சிபிஐ செவ்வாய்க்கிழமை லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பித்தது. அந்த நோட்டீஸில் ரிஷி கமலேஷ் அகா்வால் உள்ளிட்டோா் இந்தியாவில்தான் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவா்கள் இந்தியாவிலிருந்து தப்பிச் செல்வதை தடுக்க லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com