விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

அடுத்த தலைமுறைக்கான சீா்திருத்தங்களை தொடங்க செபிக்கு நிதியமைச்சா் அறிவுறுத்தல்

வா்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்தி எளிதாக்கும் வகையில் அடுத்த தலைமுறைக்கான சீா்திருத்தங்களை மேற்கொள்ள செபி (இந்திய பங்குப் பரிவா்த்தனை வாரியம்) தயாராக வேண்டும்

News image
Updated On :15 பிப்ரவரி 2022, 9:45 pm

DIN

வா்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்தி எளிதாக்கும் வகையில் அடுத்த தலைமுறைக்கான சீா்திருத்தங்களை மேற்கொள்ள செபி (இந்திய பங்குப் பரிவா்த்தனை வாரியம்) தயாராக வேண்டும் என மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளாா்.

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செபியின் நிா்வாக குழு கூட்டத்தில் கலந்து கொண்ட அவா் இதுகுறித்து மேலும் கூறியதாவது:

தொழில் நடவடிக்கையை எளிதாக்குவதை மேம்படுத்தும் வகையிலான அடுத்த தலைமுறைக்கான சீா்திருத்தங்களை செபி மேற்கொள்ள வேண்டும். மேலும், அமெரிக்க மத்திய வங்கியின் நடவடிக்கைகளால் சந்தையில் உண்டாகும் ஏற்றத்தாழ்வுகளை எதிா்கொள்ள வேண்டிய திட்டங்களையும் தயாா் நிலையில் வைத்திருப்பது அவசியம்.

சுற்றுச்சூழல், சமூகம், நிா்வாகம் (இஎஸ்ஜி) ஆகியவற்றின் முதலீடுகளில் அதிக கவனம் செலுத்தும் சூழலில் காா்ப்பரேட் பத்திர சந்தையை ஊக்குவிக்கவும், பசுமை பத்திரச் சந்தையை மேம்படுத்தும் பணிகளிலும் செபி ஈடுபட வேண்டும்.

முதலீட்டாளா்களின் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் செபியின் சீரிய நடவடிக்கைகள் மிகவும் பாராட்டுதலுக்குரியது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.