
கால்நடைத் தீவன ஊழல் தொடர்பான மேலும் ஒரு வழக்கில் பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என ராஞ்சி சிபிஐ நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வழங்கியுள்ளது.
கால்நடைத் தீவன ஊழல் தொடர்பான நான்கு வழக்குகளில் ஏற்கனவே குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டு தண்டனையில் இருக்கும் லாலு, உடல்நலக் குறைவால் தற்போது ஜாமினில் வெளிவந்துள்ளார்.
இதையும் படிக்க | போர் பதற்றம்: உக்ரைனிலிருக்கும் இந்தியர்கள் வெளியேற அறிவுறுத்தல்
இந்நிலையில், ராஞ்சி தோரந்தா கருவூலத்தில் இருந்து ரூ. 139 கோடி பணப் பரிமாற்றம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் இன்று ராஞ்சி சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், லாலு பிரசாத் உள்ளிட்ட 75 பேர் குற்றவாளிகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இவர்களுக்கான தண்டனை விவரங்களை பிப்ரவரி 18ஆம் தேதி நீதிமன்றம் அறிவிக்கவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.