தில்லியில் தொடர்ந்து 'மோசம்' பிரிவில் காற்றின் தரம்!

தலைநகர் தில்லியில் காற்றின் தரம் தொடர்ந்து மோசமான நிலையில் இருந்து வருகிறது. 
தில்லியில் தொடர்ந்து 'மோசம்' பிரிவில் காற்றின் தரம்!
Published on
Updated on
1 min read

தலைநகர் தில்லியில் காற்றின் தரம் தொடர்ந்து மோசமான நிலையில் இருந்து வருகிறது. 

புதன்கிழமை காலை நிலவரப்படி, காற்றின் தரம் 'மோசம்' பிரிவில் உள்ளது. 'மோசம்' பிரிவில் நீடிக்கும் காற்றின் தரக் குறியீடு 235 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. 

தில்லி பல்கலைக்கழகம், லோதி சாலை, விமான நிலையம், ஐஐடி ஆகிய பகுதிகளில் முறையே, 262, 228, 215, 176 என உள்ளன. 

காற்றில் இருக்கும் நுண்ணிய துகள்களின் அளவுகளான பி.எம். 2.5 மற்றும் பி.எம்.10 முறையே 101 மற்றும் 192 புள்ளிகளில் உள்ளன. 

அடுத்த சில தினங்களுக்கும் காற்றின் தரம் இதே நிலையில்தான் நீடிக்கும் என்றும் அதேநேரத்தில் காற்றின் வேகம் காரணமாக வருகிற பிப்ரவரி 19, 20 தேதிகளில் காற்றின் தரம் சற்று மேம்படலாம் என்றும் கூறப்படுகிறது. 

இதேபோல, நொய்டாவில் காற்றின் தரம் 273 புள்ளிகளுடன் 'மோசம்' பிரிவிலும், குருகிராமில் 148 புள்ளிகளுடன் 'மிதமான' பிரிவிலும் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com