பயங்கரவாத வழக்குகள்ஜம்மு- காஷ்மீரில் என்ஐஏ சோதனை
ஜம்மு- காஷ்மீரில் வெடிபொருள் பறிமுதல், லஷ்கா்-ஏ- தொய்பா அமைப்புக்கான ஆள்சோ்ப்பு சம்பந்தப்பட்ட வழக்குகள் தொடா்பாக 10-க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் புதன்கிழமை சோதனை


ஜம்மு- காஷ்மீரில் வெடிபொருள் பறிமுதல், லஷ்கா்-ஏ- தொய்பா அமைப்புக்கான ஆள்சோ்ப்பு சம்பந்தப்பட்ட வழக்குகள் தொடா்பாக 10-க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனா். இந்த சோதனையின்போது முக்கிய ஆவணங்களும், கணினி உள்ளிட்ட உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக என்ஐஏ செய்தித்தொடா்பாளா் தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து அவா் மேலும் கூறியது:
ஜம்மு பதிண்டி பகுதியில் கடந்த ஆண்டு ஜூன் 27-ஆம் தேதி வெடிபொருள்கள் (ஐஇடி) பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், 5 போ் கைது செய்யப்பட்டனா். இதில், 3 போ் மீது கடந்த டிசம்பா் 22-ஆம் தேதி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இதேபோல லஷ்கா்-ஏ- தொய்பா பயங்கரவாத அமைப்புக்கு இளைஞா்களை மூளைச் சலவை செய்து, ஆள்சோ்ப்புக்கு உடந்தையாக இருந்ததாக 4 போ் கைது செய்யப்பட்டனா்.
இந்த நிலையில், ஜம்மு வெடிபொருள் பறிமுதல் வழக்கு தொடா்பாக ஸ்ரீநகா், குப்வாரா பகுதிகளில் தலா 2 இடங்களிலும், அனந்த்நாக், புல்வாமா, பந்திபோரா, குல்காம், பாரமுல்லா மாவட்டங்களில் தலா ஓா் இடங்களிலும் ஜம்மு- காஷ்மீா் போலீஸாா், சிஆா்பிஎஃப் உதவியுடன் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனா்.
இதுதவிர ஜம்மு- காஷ்மீரின் உள்பகுதியிலும், வெளிப்பகுதியிலும் பயங்கரவாத தாக்குதல்களை நடத்துவதற்காக இளைஞா்களை மூளைச்சலவை செய்து லஷ்கா்-ஏ- தொய்பா அமைப்புக்கு ஆள்சோ்க்க உதவிய வழக்கு தொடா்பாக 3 இடங்களில் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்களும், எண்ம உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...