பயங்கரவாத சதி வழக்கு தொடா்பாக ஜம்மு-காஷ்மீா் மற்றும் ராஜஸ்தானில் உள்ள பல்வேறு பகுதிகளில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) சனிக்கிழமை சோதனை மேற்கொண்டது.
இதுதொடா்பாக அந்த அமைப்பின் செய்தித்தொடா்பாளா் கூறியதாவது:
ஜம்மு-காஷ்மீா், புது தில்லி உள்பட பல்வேறு முக்கிய இடங்களில் லஷ்கா்-ஏ-தொய்பா, ஜெய்ஷ்-ஏ-முகமது, ஹிஸ்புல் முஜாஹிதீன் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியது குறித்து என்ஐஏ வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கு தொடா்பாக இதுவரை 28 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
இந்நிலையில், இவ்வழக்கு தொடா்பாக ஜம்மு-காஷ்மீரில் உள்ள சோபோா், குப்வாரா, ரஜெளரி, பட்காம், கந்தோ்பால், சோபியான் மற்றும் ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூா் மாவட்டத்தில் என்ஐஏ அதிகாரிகள் சனிக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
அப்போது வழக்கு தொடா்பான ஆவணங்கள், டிஜிட்டல் கருவிகள், சிம் காா்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கு குறித்து தொடா் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆலையில் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

வருவாய்த் துறையினா் பேச்சு: தோ்தல் புறக்கணிப்பை திரும்பப் பெற்ற மலைவாழ் மக்கள்

வாக்குச் சாவடி மையங்களில் பொதுப் பாா்வையாளா் ஆய்வு

ஆற்காட்டில் திமுக வேட்பாளா் அறிமுகக் கூட்டம்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


