பிரபல காந்தியவாதி சகுந்தலா சௌத்ரி காலமானார்:  மோடி இரங்கல் 

பிரபல காந்தியவாதி சகுந்தலா சௌத்ரி(102) மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரபல காந்தியவாதி சகுந்தலா சௌத்ரி
பிரபல காந்தியவாதி சகுந்தலா சௌத்ரி

சுதந்திர போராட்ட வீரரும், சமூக சேவகியும், பிரபல காந்தியவாதியுமான சகுந்தலா சௌத்ரி(102) மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

காந்திய சமூக சேவகரும், சுதந்திரப் போராட்ட வீரருமான சகுந்தலா சௌத்ரி(102)  திங்கள்கிழமை காலமானார்.

அஸ்ஸாமின் கம்ரூப்பைச் சேர்ந்த சகுந்தலா சௌத்ரி, கிராம மக்களின், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனுக்காக பாடுபட்டவர். 

பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், 

"காந்திய மாண்புகளைப் பரப்புவதில் வாழ்நாள் முழுவதுமான செயல்களுக்காக சகுந்தலா சௌத்ரி நினைவுகூரப்படுவார்.  

சரனியா ஆசிரமத்தில் அவரது உன்னதமான பணி பலரது வாழ்க்கையில் ஆக்கப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தியது. அவரது மறைவால் மிகவும் துயரமடைந்தேன். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், எண்ணற்ற ரசிகர்களுக்கும்  என ஆழ்ந்த இரங்கல். ஓம் சாந்தி." என்று மோடி கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com