புரி ஜெகன்னாதர் கோயிலுக்குச் செல்ல ஆர்டிபிசிஆர் சோதனை கட்டாயமில்லை

ஒடிசாவின் புரியில் உள்ள புகழ்பெற்ற ஜெகன்னாதர் கோயிலுக்குச் செல்ல தடுப்பூசி சான்றிதழ் மற்றும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை சான்றிதழ் கட்டாயமில்லை என்று கோயில் நிர்வாகம் திங்களன்று அறிவித்தது. 
புரி ஜெகன்னாதர் கோயிலுக்குச் செல்ல ஆர்டிபிசிஆர் சோதனை கட்டாயமில்லை

ஒடிசாவின் புரியில் உள்ள புகழ்பெற்ற ஜெகன்னாதர் கோயிலுக்குச் செல்ல தடுப்பூசி சான்றிதழ் அல்லது ஆர்டிபிசிஆர் பரிசோதனை சான்றிதழ் கட்டாயமில்லை என்று கோயில் நிர்வாகம் திங்களன்று அறிவித்தது. 

கரோனா தொற்று குறைந்துவருவதைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

இதற்கு முன்னதாக கோயிலுக்குள் நுழைவதற்கு, 72 மணி நேரத்திற்குள் பெறப்பட்ட இரண்டு டோஸ் தடுப்பூசி சான்றிதழ்கள் அல்லது ஆர்டிபிசிஆர் எதிர்மறை அறிக்கைகள் பக்தர்கள் வழங்கிய பின்னரே கோயிலுக்குள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. தற்போது அந்த தடையை தளர்த்தியுள்ளது. 

கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள புதிய உத்தரவில்..

ஞாயிற்றுக்கிழமை தவிர அனைத்து நாட்களிலும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பக்தர்கள் கோயிலுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள். 

முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைப்பிடிப்பதும் கட்டாயம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மூத்த குடிமக்களுக்கு தனிவரிசை அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் வரிசையில் காத்திருக்கும்போது அவர்களுக்கு குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெகன்னாதர் கோயிலின் தலைமை நிர்வாகி கிரிஷன் குமார் கூறுகையில், மாறிவரும் சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு அவ்வப்போது விதிகள் திருத்தி அமைக்கப்படும் என்று அவர் கூறினார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com