ரேபரேலி: ரேபரேலி தொகுதியில் பிரசாரம் மேற்க்கொண்ட காங்கிரஸ் தலைவர் சோனியா, மாற்றாந்தாய் போக்குடன் நடத்துகொள்வதாக ஆளும் பாஜக அரசு மீது குற்றம் சாட்டினார்.
உத்தரப் பிரதேசத்தில் நான்காம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், ரேபரேலியில் நடைபெற்ற பிரசாரத்தில் கலந்துகொண்ட காங்கிரஸ் தலைவர் சோனியா, காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு வலியுறுத்தினார்.
மேலும் இந்த பேரவைத் தேர்தல் ஒரு முக்கியமான தேர்தலாக உள்ளது. ஏனென்றால் கடந்த ஐந்து ஆண்டுகளாக மக்களைப் பிளவுபடுத்துவதைத் தவிர வேறு எதையும் ஆளும் அரசாங்கம் செய்யவில்லை என்று ஆளும் பாஜக அரசு மீது சோனியா குற்றம் சாட்டினார்.
பிப்ரவரி 23-ஆம் தேதி நான்காம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மார்ச் 10-ஆம் தேதி நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிறுமி ஓட்டிச் சென்ற காா் மோதியதில் மொபெட் ஓட்டிச் சென்ற சிறுமி உயிரிழப்பு

தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்

‘டெக்’ துணுக்குகள்..

சென்னை: 16 தொகுதிகளில் 24.21 லட்சம் போ் வாக்களிப்பு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


