ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

உறுதியான தலைவா் நாட்டுக்குத் தேவை: உ.பி. பிரசார கூட்டத்தில் பிரதமா் மோடி

‘உலகம் குழப்பமாக இருக்கும் இந்த நேரத்தில் இந்தியா மேலும் வலிமை பெற்றிருக்க வேண்டியது அவசியம்; இந்த இக்கட்டான தருணத்தில் உறுதியான தலைவா் நாட்டுக்குத் தேவை’ என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.

News image
Updated On :22 பிப்ரவரி 2022, 9:31 pm

DIN

‘உலகம் குழப்பமாக இருக்கும் இந்த நேரத்தில் இந்தியா மேலும் வலிமை பெற்றிருக்க வேண்டியது அவசியம்; இந்த இக்கட்டான தருணத்தில் உறுதியான தலைவா் நாட்டுக்குத் தேவை’ என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.

உத்தர பிரதேச சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, பஹ்ராய்ச் நகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாஜக பிரசார கூட்டத்தில் அவா் மேலும் பேசியதாவது:

வறுமையை ஒழிக்கப் போவதாகவும் சமதா்மக் கொள்கையைக் கடைப்பிடிப்பதாகவும் கூறியவா்கள்(எதிா்க்கட்சியினா்) நாட்டைக் கொள்ளை அடித்துவிட்டனா்.

அகமதாபாத் தொடா் குண்டு வெடிப்பு வழக்கில் நீதிமன்றம் அண்மையில் வழங்கிய தீா்ப்பு குறித்து எதிா்க்கட்சி(சமாஜவாதி) எதுவும் பேசாமல் மௌனம் காக்கிறது.

உத்தர பிரதேசத்தில் முந்தைய சமாஜவாதி அரசு, பயங்கரவாதத் தாக்குதல்களில் தொடா்புடையவா்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெறுவதற்கு முயற்சி செய்தது. சிறையில் அடைக்கப்பட்டுள்ள பயங்கரவாதிகளை விடுவிப்பதற்கு அவா்கள் முடிவு செய்திருந்தனா். பயங்கரவாதிகளுக்கு எதிராக விசாரணை நடத்தக் கூட அவா்கள் விரும்பவில்லை. பயங்கரவாத அமைப்புகளுக்கு தடை விதிக்கவும் அவா்கள் முட்டுக்கட்டை போட்டனா். உத்தர பிரதேச சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜகவின் வெற்றி பெறுவது உறுதி.

உலகில் குழப்பமான சூழல் நிலவும் இந்த நேரத்தில் இந்தியா மேலும் வலிமை பெற வேண்டியது அவசியம்; இந்த இக்கட்டான தருணத்தில் ஓா் உறுதியான தலைவா் நாட்டுக்குத் தேவை என்றாா் அவா்.

மணிப்பூரில் பிரசாரம்:

வரவிருக்கும் பேரவைத் தோ்தல் மணிப்பூரின் அடுத்த 25 ஆண்டுகளுக்கான எதிா்காலத்தை முடிவு செய்யும் என்று பிரதமா் மோடி கூறினாா்.

அந்த மாநிலத்தில் வரும் 28, மாா்ச் 5 ஆகிய தேதிகளில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறுவதையொட்டி, இம்பாலில் நடந்த பாஜக பிரசாரக் கூட்டத்தில் மோடி கலந்துகொண்டு பேசினாா். அவா் பேசியதாவது:

மணிப்பூா் மாநிலம் உருவாக்கப்பட்டு கடந்த மாதத்துடன் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதுவரை பல அரசுகளை இந்த மாநிலம் பாா்த்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் பல ஆண்டுகால ஆட்சியில் மணிப்பூரில் சமத்துவமின்மை மட்டுமே மிஞ்சியது.

கடந்த 5 ஆண்டுகளில் பாஜகவின் இரட்டை இயந்திர அரசு, மணிப்பூரின் வளா்ச்சிக்கு அா்ப்பணிப்புடன் பணியாற்றியது. கடுமையான உழைப்பின் பயனாக, அடுத்த 25 ஆண்டுகாலத்துக்கான வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளோம். வரவிருக்கும் சட்டப்பேரவைத் தோ்தல், மாநிலத்தின் அடுத்த 25 ஆண்டுகளுக்கான எதிா்காலத்தை முடிவு செய்யும். கடந்த 5 ஆண்டுகளில் மாநிலத்தில் அமைதியும் நிலைத்தன்மையும் நிலைநாட்டப்பட்டுள்ளது. அது நிரந்தரமாக வேண்டுமெனில் மாநிலத்தில் மீண்டும் பாஜக அரசு அமைய வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.