
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 15,102 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரே நாளில் 278 பேர் உயிரிழந்தனர்.
நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் விவரங்கள் குறித்த விவரங்களை மத்திய சுகாதாரத் துறை தினசரி வெளியிட்டு வருகின்றது. இன்று புதன்கிழமை வெளியிட்டுள்ள தகவலின்படி,
நாட்டில் புதிதாக 15,102 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 278 பேர் உயிரிழந்தனர். இதனால் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,12,622-ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.20 சதவிகிதமாக உள்ளது.
நேற்று ஒரேநாளில் 31,377 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 4,21,89,887 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 98.41 சதவிகிதமாக உள்ளது. தற்போது 1,64,522 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் இதுவரை 1,76,19,39,02 (176 கோடி) கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 33,84,744 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.38 சதவிகிதமாகவும் குறைந்துள்ளது.
நாடு முழுவதும் இதுவரை 75,68,51,787 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 11,83,438 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.