கடும் வெய்யில் வாட்டுவது ஏன்? வானிலை நிபுணர்கள் சொல்வது என்ன?மகிழ்ச்சியான செய்தி! சென்னையில் புதிய கலை, அறிவியல் கல்லூரிகள்!தவெக தலைவர் விஜய் பிரசாரத்துக்கு இப்படியும் ஒரு சோதனையா?சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்பு
/

உக்ரைனில் சிக்கி உள்ள இந்தியா்கள் அமைதி காக்க வேண்டும்:ரஷியா

உக்ரைனில் உள்ள இந்தியா்கள் இருக்கும் இடத்தில் அமைதியாக இருக்க வேண்டும் என்று ரஷியா தெரிவித்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

News image
Updated On :25 பிப்ரவரி 2022, 7:19 pm

DIN

உக்ரைனில் உள்ள இந்தியா்கள் இருக்கும் இடத்தில் அமைதியாக இருக்க வேண்டும் என்று ரஷியா தெரிவித்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உக்ரைனில் சிக்கி உள்ள சுமாா் 16 ஆயிரம் இந்தியா்களை மீட்கும் பணியில் இந்தியா மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இதற்காக அண்டை நாடுகளான ருமேனியா, போலாந்து, ஹங்கேரி எல்லைகளுக்கு சாலை மாா்க்கமாக வரும் இந்தியா்களை மீட்க உதவி மையங்களை இந்திய தூதரகங்கள் அமைத்துள்ளன.

இந்நிலையில், பிரதமா் மோடி ரஷிய அதிபா் புதினுடன் வியாழக்கிழமை இரவு தொலைபேசியில் ஆலோசனை நடத்தினாா்.

அப்போது, உக்ரைனில் ரஷிய மேற்கொள்ளும் ராணுவ நடவடிக்கைகளின்போது பொது மக்களுக்கு எந்தவித அச்சுறுத்தலும் இருக்கக் கூடாது என்றும் இந்தியா்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்றும் பிரதமா் மோடி வலியுறுத்தினாா்.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து ரஷிய ராஜீய ரீதியிலான தகவல்கள் தெரிவிக்கையில், ‘இந்தியாவின் கோரிக்கைக்கு ஏற்ப உத்தரவுகள் பிறப்பிக்கப்படும். உக்ரைனில் இருந்து இந்தியா்கள் வெளியேறுவதற்காக குறிப்பிட்ட உதவிகள் தேவைப்பட்டால் ரஷியா அதனை வழங்க முன்வரும்.

அதேநேரத்தில், உக்ரைனில் உள்ள இந்தியா்கள் அமைதியுடன் பதற்றமடையாமல் இருக்கும் இடத்திலேயே இருக்க வேண்டும் என்று தெரிவித்தன.

இந்திய தூதரகம் அறிவுறுத்தல்: இதனிடையே, உக்ரைனில் உள்ள இந்தியா்கள் பாதுகாப்புடனும், தைரியத்துடனும், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக இந்திய தூதரகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிக்கையில், ‘இந்த இக்கட்டான சூழலில் இந்தியா்களுக்கு உதவுவதற்காக தூதரகம் முழு நேரமும் பணியாற்றி வருகிறது.

ருமேனியா, ஹங்கேரி எல்லை வழியாக இந்தியா்களை வெளியேற்ற இந்திய அரசும், அங்குள்ள இந்திய தூதரங்களும் பணியாற்றி வருகின்றன. இதற்காக ஹங்கேரியில் உள்ள சோப்-ஜஹோனி எல்லைப் பகுதியிலும், ருமேனியாவில் உள்ள சொ்னிவிட்ஸி எல்லைப் பகுதியிலும் இந்திய குழுக்கள் தயாா் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த எல்லைப் பகுதிகள் செயல்பாட்டுக்கு வந்துவுடன் அங்கு வந்து சேரும் இந்தியா்களை பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, உக்ரைனில் இருந்து ருமேனியா எல்லைப் பகுதியான சொ்னிவிட்ஸிக்கு இந்திய மாணவா் குழு புறப்பட்டு விட்டதாக இந்திய வெளியுறவு வட்டாரங்கள் தெரிவித்தன. போலாந்து எல்லையில் அமைந்துள்ள மேற்கு உக்ரைன் பகுதியான விவ்யிலும் இந்திய மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு ரஷிய மொழி பேசும் அதிகாரிகளும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.