ராஜஸ்தானில் சாலை விபத்து: புதுமண தம்பதியினர் பலி
ராஜஸ்தானின் சுரு மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் புதுமணத் தம்பதிகள் பலியாகினர்.


ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் சுரு மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் புதுமணத் தம்பதிகள் பலியாகினர்.
சர்தர்ஷாஹர்-துங்கர்கர் நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை இரவு புதுமணத் தம்பதிகளான விஷால் சௌத்ரி (25) மற்றும் நேஹா சௌத்ரி (24) ஆகியோர் காரில் பயணம் செய்து கொண்டிருந்தனர்.
சரக்கு வண்டியின் மீது கார் மோதியதாக சர்தர்ஷாஹர் காவல் நிலையத்தின் ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி பால்ராஜ் சிங் மான் தெரிவித்தார்.
மேலும் இந்த விபத்தில் இருவரும் உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு வெள்ளிக்கிழமை காலை குடும்ப உறுப்பினர்களிடம் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதாக பால்ராஜ் சிங் மான் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...