அவசரக்கால உதவி எண்ணை அறிவித்தது ஜம்மு-காஷ்மீர் காவல்துறை

ஜம்மு-காஷ்மீர் காவல்துறை அவசரக்கால உதவி எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது. 
அவசரக்கால உதவி எண்ணை அறிவித்தது ஜம்மு-காஷ்மீர் காவல்துறை
Published on
Updated on
1 min read


ஜம்மு-காஷ்மீர் காவல்துறை அவசரக்கால உதவி எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது. 

கடந்த இரண்டு நாள்களாக உக்ரைன் மீது ரஷிய போர் தொடுத்து வருவதால் பதற்றம் நிலவி வருகின்றது. இந்த தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட உயிர்ப்பலிகள் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் காவல்துறை, அவசரக்கால உதவி எண்களை அறிவித்துள்ளது. மக்கள் "112" என்ற அவசரக்கால உதவி எண்ணை அழைக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் சப்போர்ட் சிஸ்டம் (இஆர்எஸ்எஸ்) திட்டத்தின் கீழ் இந்த ஹெல்ப்லைன் தொடங்கப்பட்டுள்ளது. 

குடிமக்கள் எந்த துன்பத்தில் இருந்தாலும், எந்த வகையான அவசர உதவிக்கும் "112" இந்த எண்ணைத் தொடர்புகொள்ளலாம். 

மேலும், காவல்துறை உதவி தவிர, பெண்கள் பாதுகாப்பு விஷயத்திலும் ஆபத்தில் உள்ளவர்கள் இந்த உதவியை நாடலாம். இந்த எண்ணை  ஆம்புலன்ஸ், தீயணைப்புப் படை சேவைகளுக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com