செபியின் புதிய தலைவராக மாதவி பூரி புச் நியமனம்!

பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின்(செபி) புதிய தலைவராக மாதபி பூரி புச்சை திங்கள்கிழமை மத்திய அரசு நியமனம் செய்துள்ளது.
செபியின் புதிய தலைவராக மாதவி பூரி புச் நியமனம்!
Published on
Updated on
1 min read


மும்பை: பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின்(செபி) புதிய தலைவராக  மாதவி பூரி புச்சை திங்கள்கிழமை மத்திய அரசு நியமனம் செய்துள்ளது. செபியின் தலைவர் பதவிக்கு பெண் ஒருவர் நியமனம் செய்யப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும். 

செபியின் புதிய தலைவராக, நிதித்துறையில் 30 ஆண்டுகள் அனுபவம் கொண்ட துறையைச் சேர்ந்த மாதவி பூரி புச்சை மத்திய அரசு நியமித்துள்ளது.

இந்த பதவிக்கு பொதுவாக பொதுத்துறை அல்லது துறை சார்ந்தவர்களை நியமனம் செய்யும் வழக்கமான நடைமுறையில் இருந்து விலகி, தனியார் துறையைச் சேர்ந்த ஒருவரை நியமனம் செய்திருப்பது இதுவே முதல்முறை. 

1984 ஆம் ஆண்டு குடிமைப்பணி பிரிவைச் சேர்ந்த இமாச்சலப்பிரதேச ஐஏஎஸ் அதிகாரியான அஜய் தியாகி, கடந்த 2017-ஆம் ஆண்டு மார்ச் 1-ஆம் தேதி முதல் மூன்று ஆண்டுகளுக்கு செபி தலைவராக நியமிக்கப்பட்டார். 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதமே அவரது பதவிக்காலம் முடிவடைந்தது. ஆனால், கரோனா நோய்த்தொற்று பரவல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அஜய் தியாகிக்கு முதலில் 6 மாதங்கள் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது, பின்னர் ஆகஸ்ட் 2020 இல், அவரது பதவிக்காலம் 18 மாதங்கள் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. 

இந்த நிலையில், இன்றுடன் அஜய் தியாகிக்கு பதவிக்காலம் முடிவடையும் நிலையில், ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவராகவும், கடந்த ஆண்டு வரை செபியில் முழு நேர உறுப்பினராகவும், ஷாங்காய் டெவலப்மென்ட் புதிய வங்கியில் ஆலோசகராக பணிபுரிந்து வந்த மாதவி பூரி புச் செபியின் புதிய தலைவராக  நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அடுத்த 3 ஆண்டுகளுக்கு இந்தப் பதவியில் இருப்பார் என்று பணியாளர்கள் மற்றும் பயிற்சித்துறை தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com