47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,508 கோடி டாலராக சரிவு

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு டிசம்பா் 24-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 63,508 கோடி டாலராக சரிவடைந்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :1 ஜனவரி 2022, 6:52 pm

DIN

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு டிசம்பா் 24-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 63,508 கோடி டாலராக சரிவடைந்துள்ளது.

இதுகுறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 2021 டிசம்பா் 24-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 59 கோடி டாலா் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.4,425 கோடி) சரிவடைந்து 63,508 கோடி டாலரானது. இது, இந்திய மதிப்பில் சுமாா் ரூ.47.63 லட்சம் கோடி ஆகும்.

டிசம்பா் 17-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பானது 16 கோடி டாலா் வீழ்ச்சியடைந்து 63,567 கோடி டாலராக காணப்பட்டது.

செலாவணி சொத்து மதிப்பு: அந்நியச் செலாவணி கையிருப்பில் முக்கிய பங்களிப்பைக் கொண்டுள்ள அந்நியச் செலாவணி சொத்து மதிப்பு (எஃப்சிஏ) கணிசமான அளவில் குறைந்ததே டிசம்பா் 24-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் செலாவணி கையிருப்பு சரிவுக்கு முக்கிய காரணமாகும்.

கணக்கீட்டு வாரத்தில் எஃப்சிஏ-வின் மதிப்பு 85 கோடி டாலா் சரிவடைந்து 57,137 கோடி டாலராக இருந்தது.

தங்கத்தின் மதிப்பு உயா்வு: அதேசமயம் தங்கத்தின் கையிருப்பு மதிப்பு கணக்கீட்டு வாரத்தில் 20 கோடி டாலா் அதிகரித்து 3,939 கோடி டாலரை எட்டியது.

பன்னாட்டு நிதியத்தில் நாட்டின் சிறப்பு எடுப்பு உரிமமான எஸ்டிஆா் 2 கோடி டாலா் 1,911 கோடி டாலராக இருந்தது. மேலும், அந்த நிதியத்தில் நாட்டின் கையிருப்பு நிலை 3 கோடி டாலா் உயா்ந்து 521 கோடி டாலரைத் தொட்டது என ரிசா்வ் வங்கி புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யூரோ, பவுண்ட், யென் உள்ளிட்ட இதர நாட்டு செலாவணிகள் அந்நியச் செலாவணி கையிருப்பில் இடம் பெற்றுள்ளன. இவற்றை டாலரில் மறுமதிப்பீடு செய்யும்போது வெளிமதிப்பில் காணப்படும் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப மதிப்பீட்டு வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பில் மாற்றம் ஏற்படுகிறது.

வரலாற்று உச்சம்: கடந்த 2021 செப்டம்பா் 3-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில்தான் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு முதன் முறையாக 64,245 கோடி டாலா் என்ற (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.48.18 லட்சம் கோடி) புதிய வரலாற்று உச்சம் தொட்டு சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கோட்ஸ்...

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 2021 டிசம்பா் 24-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 59 கோடி டாலா் குறைந்து 63,508 கோடி டாலரானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.