47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

அணு சக்தி மைய விவர பட்டியல்: இந்தியா-பாக். பரிமாற்றம்

இந்தியா - பாகிஸ்தானிடையே மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையில் இரு நாடுகளும் தங்களுடைய அணு சக்தி மையங்களின் விவரப் பட்டியலை சனிக்கிழமை பரிமாறிக்கொண்டன.

News image
Updated On :1 ஜனவரி 2022, 7:38 pm

DIN

இந்தியா - பாகிஸ்தானிடையே மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையில் இரு நாடுகளும் தங்களுடைய அணு சக்தி மையங்களின் விவரப் பட்டியலை சனிக்கிழமை பரிமாறிக்கொண்டன.

அணு சக்தி மையங்கள் மீது தாக்குதல் நடத்துவதை தவிா்க்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்த ஒப்பந்தத்தின்படி, தொடா்ந்து 31-ஆவது ஆண்டாக இந்த நடைமுறையை இரு நாடுகளும் மேற்கொண்டுள்ளன என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியுறவு அமைச்சகம் தனது அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் தேதியில் இந்த விவரங்களைப் பரிமாறிக்கொள்ளும் வகையில் கடந்த 1988-ஆம் ஆண்டு டிசம்பா் 31-ஆம் தேதி ஒப்பந்தம் போடப்பட்டு, 1991-ஆம் ஆண்டு ஜனவரி 27-ஆம் தேதி நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. அதன்படி, முதல் விவரப் பட்டியலை கடந்த 1992-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி இரு நாடுகளும் பரிமாறிக்கொண்டன. தற்போது, 31-ஆம் ஆண்டாக இந்த விவரப் பட்டியலை இரு நாடுகளின் தூதரகங்கள் மூலமாக சனிக்கிழமை பரிமாறிக்கொண்டன என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.