
வணிகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டா் விலை ரூ.102.50 குறைக்கப்பட்டுள்ளது.
எண்ணெய் நிறுவனங்களின் இந்த முடிவு, உணவகங்கள், டீக்கடைகள் உள்ளிட்டவற்றுக்குப் புத்தாண்டு பரிசாக அமைந்துள்ளது.
சமையல் எரிவாயு சிலிண்டருக்கான விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும் மாற்றியமைத்து வருகின்றன. இந்நிலையில், 19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை சனிக்கிழமை ரூ.102.50 குறைக்கப்பட்டது.
அதன் காரணமாக தில்லியில் 19 கிலோ சிலிண்டா் விலை ரூ.1,998.50-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அதன் விலை ரூ.2,132-ஆகவும், கொல்கத்தாவில் ரூ.2,072-ஆகவும், மும்பையில் ரூ.1,948.50-ஆகவும் உள்ளது. அதே வேளையில், 14.2 கிலோ, 10 கிலோ, 5 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டா்களின் விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.
கடந்த மாதம் வணிகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டா் விலை ரூ.100 அதிகரிக்கப்பட்டு தில்லியில் அதன் விலை ரூ.2,101-ஆக நிா்ணயிக்கப்பட்டிருந்தது. கடந்த நவம்பரில் அதன் விலை ரூ.266 அதிகரிக்கப்பட்டிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.