புது தில்லி: ஒமைக்ரான் முந்தைய கரோனா தொற்று வகைகளைக் காட்டிலும் குறைவான தீவிரத்தன்மை கொண்டது என்றும், இது நுரையீரலில் அதிக பாதிப்பை ஏற்படுத்தாது என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
வெள்ளெலிகள் மற்றும் எலிகள் பற்றிய அமெரிக்க மற்றும் ஜப்பானிய விஞ்ஞானிகளின் கூட்டமைப்பு நடத்திய ஆய்வில், ஒமைக்ரான் தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு நுரையீரல் பாதிப்பு குறைவாக இருப்பதாகவும், உடல் எடையைக் குறைப்பதாகவும், கரோனா தொற்றின் பிற வகைகளால் பாதித்தவர்களைக் காட்டிலும், ஒமைக்ரான் பாதிப்பால் இறப்பவர்களின் வாய்ப்பு குறைவாக இருப்பதாக டெய்லி மெயில் தெரிவித்துள்ளது.
கரோனா தொற்றின் உருமாற்றம் அடைந்த மற்ற வகைகளுடன் ஒமைக்ரானை ஒப்பிடும்போது ஒமைக்ரானால் பாதிக்கப்பட்ட எலிகளின் நுரையீரலில் தொற்று பாதிப்பு பத்தில் ஒரு பங்கு குறைவாக இருப்பது கண்டறியப்பட்டதாக அந்த ஆய்வில் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதனை ஒமைக்ரான் பாதிக்கப்பட்டவர்களின் மனித திசுக்களை ஆய்வு செய்து வரும் ஹாங்காங் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் ஆய்வுக் குழு ஆதரிக்கின்றன.
ஒமைக்ரான் பாதித்தவர்களில் 12 பேரின் நுரையீரலை ஆய்வு செய்ததில் முந்தைய தொற்று பாதிப்புகளை விட ஒமைக்ரான் கணிசமான அளவில் மெதுவாக வளர்ந்துள்ளது கண்டறிப்பட்டுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எனவே ஒமைக்ரான் நுரையீரலின் கீழ் பகுதிகளில் அதிகமாகன பாதிப்புகளை ஏற்படுத்தாது, அது குறைவான குறிப்பிடத்தக்க சேதத்தை மட்டும் ஏற்படுத்துகிறது, இது அதன் தீவிரத்தன்மையைக் குறைக்கும் என்று நம்புவதாக வல்லுநர்கள் கூறிகின்றனர்.
தென்னாப்பிரிக்காவின் தரவுகள் படி, டெல்டா தொற்று நோயாளிகளை விட ஒமைக்ரான் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையிலேயே இறக்கும் வாய்ப்பு 80 சதவீதம் குறைவாக இருப்பதாக கூறுகிறது. இதேபோன்று இங்கிலாந்து ஹெல்த் அண்ட் செக்யூரிட்டியின் நடத்திய ஆய்வில், ஒமைக்ரான் பாதிப்பால் உயிரிழப்புகள் 70 சதவிகிதத்திற்கும் குறைவாக இருப்பதாக கூறுகின்றது.
பெர்லின் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹெல்த் நிறுவனத்தின் கணக்கீட்டு உயிரியலாளரான ரோலண்ட் ஈல்ஸ், உருமாற்றம் அடைந்து பரவி வரும் ஒமைக்ரான் தொற்றானது நுரையீரலுக்கு வெளியே இருந்து பாதிப்பை ஏற்படுத்த முனைகிறது என்று கூறியுள்ளார்.
இதையும் படிக்க | மீன்வளத்துறையில் அலுவலக உதவியாளா் பணி: விண்ணப்பிப்பது எப்படி?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அடுத்த 3 மணி நேரத்துக்கு 19 மாவட்டங்களில் மழை!

புல்வாமா தாக்குதல் நடத்திய பயங்கரவாதி மர்ம மரணம்!
வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்

நரசிம்மர் ஜெயந்தி: பூவரசன்குப்பம்லட்சுமி நரசிம்மர் கோயிலில் சிறப்பு வழிபாடு!
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


