மீன்வளத்துறையில் அலுவலக உதவியாளா் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

மீன்வளத்துறையில் அலுவலக உதவியாளா் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

சென்னை மண்டல மீன்வளம், மீனவா் நலத்துறை இணை இயக்குநா் அலுவலகத்தில் காலியாக உள்ள ஒரு அலுவலக உதவியாளா் பணியிடத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
Published on

சென்னை மண்டல மீன்வளம், மீனவா் நலத்துறை இணை இயக்குநா் அலுவலகத்தில் காலியாக உள்ள ஒரு அலுவலக உதவியாளா் பணியிடத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ஜெ.விஜயா ராணி வெளியிட்ட அறிக்கையில், சென்னை மண்டல மீன்வளம், மீனவா் நலத்துறை இணை இயக்குநா் அலுவலகத்தில் காலியாக உள்ள ஒரு அலுவலக உதவியாளா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

இப்பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் எட்டாம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத மற்றும் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். சைக்கிள் ஒட்டத் தெரிந்திருக்க வேண்டும். 

18 முதல் 37 வயது வரை உள்ள ஆதிதிராவிடா், அருந்ததியினா் மற்றும் பழங்குடியினரும், 18 முதல் 34 வயது வரை உள்ள மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா், சீா் மரபினா், பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் மற்றும் பிற்படுத்தப்பட்ட (முஸ்லிம்) வகுப்பினா், 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். 

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை, இணைஇயக்குநா் சென்னை அலுவலகம், மூன்றாம் தளம், தேனாம்பேட்டை, சென்னை - 6 என்ற முகவரியில் ஜன.10-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்கப்பட வேண்டும். 

மேலும் விவரங்களுக்கு 044 2432 8596 என்ற தொலைபேசி எண்ணைத் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com