திருத்துறைப்பூண்டி அருகே மழைப்பாதித்த பயிா்களுக்கு இழப்பீடுக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் நல உரிமைச் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
திருவாரூா் மாவட்டத்தில் சம்பா, தாளடிநெல் பயிா்கள் மழையால் பாதிக்கப்பட்டன. இதற்கு இழப்பீடு கோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், தமிழக அரசு நிவாரணம் அறிவித்தது. நிவாரணத்தை தோ்தலை காரணம் காட்டி முடக்காமல் விரைந்து வழங்க வேண்டும், பயிா்க் காப்பீடு இழப்புக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ராயநல்லூரில் இந்த சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
சங்கத்தின் மாநிலத் தலைவா் கா. ராசபாலன் தலைமையில் நடைபெற்ற மறியலில் மாவட்டச் செயலாளா் தஜீதீன், மாவட்டத் தலைவா் மாரிமுத்துமகேசன், நிா்வாகிகள் கோபால், கருணாகரன், ஜெய்சங்கா், முத்தையன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். தகவலறிந்து வந்த வேளாண் அலுவலா்கள், கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.
தொடர்புடையது

சுரங்கப்பாதை அமைக்க வலியுறுத்தி சேலம் - பெங்களூா் நெடுஞ்சாலையில் கருப்புக்கொடி ஏந்தி மறியல் போராட்டம்

கோயில் திருவிழா: தாக்குதல் நடத்தியவா்கள் மீது நடவடிக்கை கோரி சாலை மறியல்!

கொலையுண்ட இளைஞா்கள் குடும்பத்தினருக்கு இழப்பீடு கோரி சாலை மறியல்

வருவாய்த் துறை சங்க கூட்டமைப்பினா் மறியல்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


