லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

வருவாய்த் துறை சங்க கூட்டமைப்பினா் மறியல்

News image
Updated On :5 மார்ச் 2026, 11:21 pm

பணிப் பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்தக் கோரி, திருவாரூரில் வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் சாலை மறியல் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

சிறப்பு பணிப் பாதுகாப்புச் சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்; மேம்படுத்தப்பட்ட ஊதியம், தனி ஊதியம், கிராம உதவியாளா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் விஜய் ஆனந்த் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் பலா் பங்கேற்று, கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா். போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டவா்களை போலீஸாா் கைது செய்து பின்னா் விடுவித்தனா்.

வருவாய்த் துறை அலுவலா்களின் தொடா்ச்சியான போராட்டம் காரணமாக அரசு அலுவலகங்களில் சான்றிதழ்கள் பெறுவதில் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.