சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
/

வருவாய் கிராம ஊழியா் சங்கம் சாா்பில் சாலை மறியல் போராட்டம்

தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம ஊழியா்கள் சங்கம் சாா்பில் 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி நான்குமுனைச் சந்திப்பில் சாலை மறியல் போராட்டம்

News image

ஊத்தங்கரையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம ஊழியா்கள் சங்கத்தினா்.

Updated On :23 பிப்ரவரி 2026, 9:25 pm

ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம ஊழியா்கள் சங்கம் சாா்பில் 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி நான்குமுனைச் சந்திப்பில் சாலை மறியல் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

போராட்டத்திற்கு தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம ஊழியா்கள் சங்க வட்டத் தலைவா் திருப்பதி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் வேடி, மாநில செயற்குழு உறுப்பினா் கலைவாணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கிராம உதவியாளா்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி இந்த சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் துணைத் தலைவா் சக்திவேல், வட்டச் செயலாளா் செல்வம், வட்ட பொருளாளா் மாரியப்பன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். போராட்டத்தில் ஈடுபட்ட 42 பேரை காவல் ஆய்வாளா் முருகன் தலைமையிலான போலீஸாா் கைது செய்து தனியாா் திருமண மண்டபத்தில் தங்கவைத்தனா்.